×

ஈரான் மீதான தடையால் ஏற்படும் கச்சா எண்ணெய் பாதிப்பை சமாளிக்க இந்தியா தயார்

புதுடெல்லி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. எனினும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான தடையை இனி எந்த வகையிலும் தளர்த்த முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த கெடு தற்போது முடிந்து விட்டதால், பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று கூறுகையில், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிந்து விட்டது. இருப்பினும் இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Iran , Iran ban, crude oil, India
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...