×

ஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்த்து. இதனையடுத்தது ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் ஐதராபாத் அணி  2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன் எடுத்தது. அடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா மும்பை அணி 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,team win ,Mumbai ,Hyderabad , IPL T20 match, Hyderabad team, super over, Mumbai team, thrill win
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?