×

ஐபிஎல் டி20 போட்டி: ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் தேர்வு

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் ஆடி, அவற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் 3-ம் இடத்திற்கு முன்னேறி விடும்.  இத்தொடரின் வெற்றிகரமான ஓபனர்கள் என்று கொண்டாடப்பட்ட சன் ரைசர்ஸ் வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் உலகக்கோப்பை ஒருநாள் தொடருக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க தங்களது நாட்டுக்கு திரும்பி விட்டனர்.

 இதனால் இன்றைய போட்டியில் டேவிட் வார்னருக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் இறக்கப்படுவார் என்று தெரிகிறது. வார்னர், பேர்ஸ்டோ இல்லாத குறையை போக்க மனீஷ் பாண்டே, விஜய் ஷங்கர், கேன் வில்லியம்ஸ் மற்றும் ரித்திமான் சாஹா ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் ஆடி தேவையான ரன்களை குவிக்க வேண்டும் என்ற நிலையில் சன் ரைசர்ஸ் உள்ளது. ரோஹித் ஷர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா என பேட்டிங்கில் மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் வலுவாக வரிசை கட்டுகின்றனர்.இரு அணிகளிலுமே பந்து வீச்சில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மும்பை வான்கடே மைதானத்தை பொறுத்த வரை முதலில் பேட் செய்து சவாலான இலக்கை நிர்ணயிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்ததாக தெரிகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Mumbai ,team batting selection ,Hyderabad , IPL T20 match, Hyderabad team, Mumbai team, batting
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?