×

பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியை மக்களே பதவி நீக்கம் செய்த அரசியல் அதிசயம்

லண்டன் : பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியை மக்களே பதவி நீக்கம் செய்த அரசியல் அதிசயம் நிகழ்ந்துள்ளது. 35 வயதான ஃபியோனோ ஒனாசான்யா 2017ம் ஆண்டு பீட்டர்ப்ரோ தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சியின் எம்பியாக தேர்வானார். இந்த நிலையிலோ காரை வேகமாக இயக்கியது தொடர்பான வழக்கில் ஃபியோனோ ஒனாசான்யா உண்மைக்கு மாறான தகவலை கூறியது தெரிய வந்ததால் கடந்த ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

உடனடியாக தொழிலாளர் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். எனவே அவர் சுயேச்சை எம்பியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் எம்பிக்களை மக்களே திரும்ப பெறும் சட்டத்தின் படி பீட்டர்ப்ரோ தொகுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஃபியோனோ ஒனாசான்யாவை திரும்பப் பெறும் மனுவில் 27.64% பேர் கையெழுத்திட்டனர். எனவே அவர் எம்பி பதவியை இழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் 2015ம் ஆண்டு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மக்களே எம்பிக்களை திரும்பப்பெறும் சட்டத்தை கொண்டு வந்தார். குற்றவழக்குகளில் கைது செய்யப்படும் எம்பிக்களை மக்களே பதவி நீக்கம் அதிகாரம் வழங்கப்பட்டது. 10%திற்கும் அதிகமான வாக்காளர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே எம்பியை பதவி நீக்கம் செய்ய முடியும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Britain , Britain, Fiono Onassana, MB, Workers Party
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...