×

இமயமலையில் தென்பட்டது பனிமனிதன் 'யெதி'யின் காலடித்தடம் தானா? நேபாள அரசு புதிய விளக்கம்

காத்மண்டு: இமயமலையில் தென்பட்டது பனிமனிதன் யெதியின் காலடித்தடம் தானா? என்பது குறித்து நேபாள அரசு புதிய விளக்கமளித்துள்ளது. மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாக குறிப்பிடப்படும் பனி மனிதன்(yeti) பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனிமனிதன் இமயமலை தவிர அமெரிக்கா, சைபீரியா ஆகிய பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யெதி பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக கூறி இந்திய ராணுவத்தினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்தனர். அதோடு, மாகலு–பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது, யெதியின் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் கிடைத்ததாக அவர்கள் பதிவிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து, யெதி பெரும் பேச்சு பெருளானது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் கூற்றை நேபாள அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய நேபாள ராணுவ செய்தி தொடப்ராளர் பிக்யான் தேவ் பாண்டே, இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் எட்டியின் கால்தடங்களை பார்த்ததாக கூறுகின்றனர். அந்த ராணுவத்தினருடன் எங்களது குழுவினரும் சென்றனர். உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அந்த கால் தடம் என்னவென்பதை அறிய முயற்சித்தோம். அப்போது, உள்ளூர் மக்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் அதனை கரடியின் கால்தடம் என்பதை உறுதி செய்துள்ளனர். இது போன்ற ராட்சத தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படும் எனவும் அவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Himalayas ,Yedi ,government ,Nepalese , Himalaya, snowman, Yeti, footprint, Nepal
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...