×

கும்மிடிப்பூண்டி அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மரணம் : பிறந்த நாளில் சோகம்

சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் பணியில் இருந்த கண்டக்டர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (50). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்.  செங்குன்றத்தில் இருந்து தேர்வாய் செல்லும் அரசு பேருந்தில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் செங்குன்றத்தில் இருந்து தேர்வாய்க்கு புறப்பட்ட  பேருந்தில் செல்லையா பணியில் இருந்தார். தச்சூர் கூட்டு சாலை அருகே சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு செல்லையாவை பரிசோதித்த டாக்டர்கள்,  வரும் வழியிலேயே இறந்துபோனதாக தெரிவித்தனர்.இறந்த கண்டக்டருக்கு நேற்று பிறந்த நாள் என்பதை அறிந்து உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,gummidipoondi ,birth , gummidipoondi, conductor, running bus, birthday
× RELATED சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு