×

ஏற்றுமதி தொழிலில் 25 லட்சம் மோசடி: ‘எல்காட்’ எம்.டி மனைவி புகார்

சென்னை: ஏற்றுமதி தொழிலில் ₹25 லட்சம் மோசடி செய்த தொழிலதிபர் மீது தமிழக எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் மனைவி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார்.விருகம்பாக்கம் நடேசன் நகர் ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்தவர் லதா (52). இவரது கணவர் விஜயகுமார். தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர். லதா, கடந்த 2015ம் ஆண்டு கோடம்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது என்ற தொழிலதிபருடன் துணிகள், அழகு சாதன பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் தொடங்கினர். இதற்காக லதா பங்கு ெதாகையாக ₹32 லட்சம் பணம் முதலீடு ெசய்துள்ளார்.

இவர்கள் ஆரம்பித்த ஏற்றுமதி நிறுவனம் சரியாக செயல்படாததால் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து விலகுவதாக லதா தனது பங்குதாரரான ரியாஸ் அகமதுவிடம் கூறி முதலீடு ெசய்த ₹32 லட்சம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.ஆனால் தொழிலதிபர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ₹7 லட்சம் பணத்தை லதாவிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ₹25 லட்சம் பணத்தை திரும்ப கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து லதா ₹25 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காத தொழிலதிபர் ரியாஸ் அகமது மீது  விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகாரளித்தார். இதுதொடர்பாக தொழிலதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 25 lakhs fraud , export ,Elkot MD ,complains
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!