×

பானி புயல் எதிரொலி இன்றும், நாளையும் விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: பானி புயல் எதிரொலியாக இன்றும், நாளையும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் உருவாகியுள்ள பானி புயல் 3ம் தேதி (நாளை) ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்தபாலி இடையே கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பானி புயல் எதிரொலியாக சென்ட்ரல்-சந்திரகாசி (22808) விரைவு ரயில், சென்ட்ரல்-ஹால்டியா (22613) விரைவு ரயில், சென்ட்ரல்-ஷல்மார் (22826), சென்ட்ரல்-ஹவுரா (12840) விரைவு ரயில், திருவனந்தபுரம்-ஷல்மார் (22641) விரைவு ரயில், யஸ்வந்தபூர்-ஹவுரா விரைவு ரயில் (12246, 22888, 12864) உள்ளிட்ட ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்ட்ரல்-ஹவுரா கோரமண்டல் விரைவு ரயில் (12842) நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani , Bani, storm , Today ,tomorrow, Fast trains canceled
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு