×

சோதனை மேல் சோதனை கம்பீரின் மனநிலை சரி இல்லையாம்...!: முன்னாள் பயிற்சியாளர் பகீர்

இந்திய கிரிக்கெட் அணியின் `ஓபனிங் பேட்ஸ்மேன்’னாக வலம் வந்தவர் கவுதம் கம்பீர். இவர் கடந்தாண்டு டிசம்பரில் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பாஜ.வில் இணைந்தார். தற்போது, அவர் கிழக்கு டெல்லி பாஜ வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். அரசியலில் நுழைந்ததில் இருந்து அவர் மீது கல்லடி படுகிறது. அவர் 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. அந்த பிரச்னை இப்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.இந்நிலையில், அவருக்கு 2வது சோதனை வந்துள்ளது. இம்முறை அவரை தாக்கி இருப்பவர் அவருடைய முன்னாள் மனநல பயிற்சியாளர் பேடி அப்டன். அவர் எழுதி வெளியிட்டுள்ள `தி பேர்புட் கோச்’  என்ற தனது புத்தகத்தில், `2009ம் ஆண்டின் சிறந்த சர்வதேச டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வீரரான கம்பீருடன் நான் பணியாற்றி உள்ளேன்.

ஓபனிங் பேட்ஸ்மேனான அவரது ரன்களின் வரம்பு 20 முதல் 40க்குள் இருக்கும். சராசரியாக 30 ரன்கள் எடுப்பார். என்றாவது ஒருநாள் 150 ரன்கள் எடுத்து விட்டால், அது போதாது 200 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று குறைப்பட்டு கொள்வார். இது அவர் மிகவும் பாதுகாப்பற்ற மனநிலை உடையவர் என்பதை காட்டுகிறது. ஆனால், அது அவர் தலைசிறந்த வீரராவதற்கு எவ்விதத்திலும் தடையாக இருந்தது இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். கம்பீர் கூறுகையில், ‘`இந்திய அணியும் நானும் உலகின் தலை சிறந்த அணியாக இருக்க விரும்பினேன். அதனால்தான், பேடி கூறியது போல் 100 ரன்கள் எடுத்தாலும் திருப்தி அடையாமல் இருந்தேன். அவர் கூறியதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை,’’ என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coach shooter , Test,top test, Gambler's mood, Yes, no!
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...