×

பானி புயல் பாதிப்பை சமாளிக்க 11 மாவட்டங்களில் நடத்தை விதி நீக்கம்

ஒடிசாவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களவை, சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகளும் இம்மாதம் 23ம் தேதிதான் எண்ணப்பட உள்ளன. இதனால், இம்மாநிலத்தில் இப்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.  இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இது ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள சதாபாடா கடற்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பலத்த சேதமடைய வாய்ப்புள்ளதால் நிவாரண பணி மேற்கொள்வதற்கு வசதியாக, அங்கு அமலில் உள்ள தேர்தல் நடத்ைத விதியை விலக்கி கொள்ள வேண்டும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, 11 மாவட்டங்களுக்கான நடத்தை விதிமுறையை விலக்கி கொள்வதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் நேற்று அறிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bani ,districts , Bani, deal , storm impact, 11 counties, False behavior
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை