×

நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் சாய்னா அதிர்ச்சி தோல்வி

ஆக்லாந்து: நியூசிலாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.ஆக்லாந்து நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில், முதல் சுற்றில் சீனாவின் வாங் ஸியியுடன் (19 வயது, 212வது ரேங்க்) மோதிய சாய்னா (29 வயது, 9வது ரேங்க்) 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.  இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனைக்கு ஈடுகொடுத்து விளையாடிய அவர் 23-21 என்ற கணக்கில் போராடி வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.

எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாகப் புள்ளிகளைக் குவித்த வாங் ஸியி  21-16, 21-23, 21-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலும், இந்திய வீரர் லக்‌ஷ்யா சென் 21-15, 18-21, 10-21  என்ற செட் கணக்கில் தைவான் வீரர் வாங் ட்ஸூ வெய்யிடம் தோற்று வெளியேறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand Open Badminton Saina , New Zealand ,Open, Badminton ,Sains
× RELATED சாம்பியன் ஜுவென்டஸ் அதிர்ச்சி தோல்வி