×

மோடி அரசுக்கு எதிரான கருத்து தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பழங்குடியினரை சுடலாம் என மோடி அரசு சட்டம் இயற்றியதாக, மத்தியப் பிரதேசத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப் பிரசேத மாநிலம் ஷாதோல் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘பழங்குடியினருக்காக மோடி அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதில் பழங்குடியினரை சுடலாம் என்ற ஒரு வரி உள்ளது. அவர்கள் உங்கள் நிலத்தை பறிக்கிறார்கள், உங்கள் காடுகளை எடுத்துக் கொள்கிறார்கள், தண்ணீரை எடுக்கிறார்கள். பின்னர் உங்களை சுடலாம் என்கின்றனர்’’ என பேசினார்.

இது குறித்து பா.ஜ தொண்டர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேச தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அதன்படி ராகுலின் இந்தி பேச்சு, மொழி பெயர்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதால், இது குறித்து 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EC ,Rahul , Modi government, opinion, election commission, Rahul, notices
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...