×

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி காலமானார்: ஐகோர்ட் மதுரை கிளையை உருவாக்கியவர்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2001 முதல் 2004 வரை பதவி வகித்தவர் சுபாஷன் ரெட்டி. சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைத்தது உள்பட இவரது பதவிக் காலத்தில் தமிழக நீதித்துறையில் பல்வேறு நிர்வாக ரீதியான சாதனைகளை செய்துள்ளார்.அதிமுக அரசால் பணி நீக்கம், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 6072 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டு வரலாற்று தீர்ப்பளித்தவர்.

அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட சுமார் 1.7 லட்சம் பேருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கையும் விசாரித்து தீர்ப்பளித்தவர். பல்வேறு காரணங்களால் சுபாஷன் ரெட்டி 2004ல் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஓய்வுக்குப் பிறகு ஆந்திர மாநில மனித உரிமைக் கமிஷன் தலைவராக பணியாற்றினார். நீதித்துறையில் பல சாதனைகளைப் படைத்த நீதிபதி சுபாஷன் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை காலமானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subhasan Reddy ,creator ,Supreme Court ,branch ,Madurai , The Supreme Court, former judge, Subhan Reddy, passed away
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...