×

ஒஸ்மா வேலைநிறுத்தம் 10 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கும்

 கோவை: கழிவு பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓப்பன் எண்ட் மில்கள் 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதுகுறித்து ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் கூட்டமைப்பு (ஒஸ்மா) பொதுச்செயலாளர் அருள்மொழி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்க தேவையான மூலப்பொருளான காட்டன் வேஸ்ட்  எனப்படும் கழிவு பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஓப்பன் எண்ட் மில்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவு பஞ்சு விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஒஸ்மா கூட்டமைப்பு சார்பில் 1ம் தேதி (நேற்று) முதல் 5ம் தேதி வரை நூல் உற்பத்தியை நிறுத்தப்படும். இந்த போராட்டத்தில் ஒஸ்மா கூட்டமைப்பை சேர்ந்த கோவை பகுதியில் உள்ள 180 மில்கள் பங்கேற்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் கிலோ கலர் நூல்கள் உற்பத்தி இழப்பு ஏற்படும். இதனால் அரசுக்கு ரூ.14 கோடி வரை இழப்பு ஏற்படும். ஓஸ்மா கூட்டமைப்பு மில்களில் உற்பத்தியாகும் நூல்கள் பல்லடம், சோமனூர்,  ஈரோடு பகுதிகளில் விசைத்தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நூல்களை கொண்டு பெட்ஷிட், தூண்டு தயாரிக்கப்படுகிறது. எங்களது வேலை நிறுத்தத்தால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்படும். கழிவு பஞ்சுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் ஒரு சதவீத வரி தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கடந்த 2 ஆண்டுகளாக போராடியும் அரசு எந்த முடிவும் அறிவிக்கவில்லை. மேலும் கழிவு பஞ்சுகளுக்கு பேக்கிங் சார்ஜாக கிலோ ஒன்றுக்கு ரூ.2.50 வசூலிக்கப்படுகிறது. இதனால் நுால்களை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரியையும் நீக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Osman ,strike , Osma, strike, thread, production, affect
× RELATED தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில்...