×

பாஜவுக்கு செல்கிறேனா? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

சென்னை: ‘நான் பாஜவுக்கு செல்வதாக பரப்பப்படுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்’ என, தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டனாக பொது வாழ்க்கையில் களப்பணியாற்றினேன். பிறகு, பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும், வருவாய்த்துறை அமைச்சராக, நிதிஅமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, முதலமைச்சர் இருக்கையில் மூன்று முறையும், இன்று ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன்.

பெரியகுளத்தை சேர்ந்த சாதாரண பன்னீர்செல்வத்திற்கு, ஏராளமான வாய்ப்புகளை வழங்கி, என் கனவிலும் நான் எதிர்பார்த்திராத உயரங்களை தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பாஜ வுக்கு செல்லப்போகிறேன் என்று சிலர் புரளி பரப்பி வருகின்றனர். இதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன். இதை என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் செவிகொடுத்து ஏற்கமாட்டார்கள் என்கிற எனது ஆழமான நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Panneerselvam , BJP, do I go ?, o.Paniriselvam, explanation
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...