×

சேப்பாக்கத்தில் டெல்லியுடன் இன்று மோதல்: புள்ளி பட்டியலில் மீண்டும்,...முதலிடம் பிடிக்குமா சென்னை?

சென்னை: 12வது ஐபிஎல் தொடரில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கும் 50வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை 12 போட்டியில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்று டெல்லியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. சென்னையில் இதுவரை 6 போட்டியில்  ஆடிய 5ல் வெற்றி பெற்றுள்ளது. கடைசிஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றிபாதைக்குதிரும்பும் உத்வேகத்தில் உள்ளது. டோனி இன்றும் ஆடுவது சந்தேகம் தான். மறுபுறம் இளம்வீரர்களை கொண்ட டெல்லி 12 ஆட்டத்தில் 8ல்வெற்றி, 4ல் தோல்வி என 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2012ம் ஆண்டுக்கு பி்ன் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற உற்சாகத்தில் வீரர்கள் உள்ளனர்.

தவான், ஸ்ரேயாஸ் ஐயர்,  பிரித்விஷா, ரிஷப் பன்ட் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்த்து வருகின்றனர். பந்து வீச்சில் ரபாடா 25 விக்கெட் கைப்பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார்.  நடப்பு சீசனில் சொந்த மண்ணில் டெல்லி  6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பழிதீர்க்கும் எண்ணத்தில் களம் இறங்குகின்றனர்.  ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 19 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 13ல் சென்னையும், 6ல் டெல்லியும் வெற்றிகண்டுள்ளது.  சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியதில் 5ல் சென்னையும், 2ல் டெல்லியும் வெற்றிபெற்றுள்ளன.

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்சி சூப்பர்
டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி அளித்துள்ள பேட்டி: டெல்லி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்கான பெருமை  லெவனில் ஆடும் அனைத்து வீரர்களையும் சாரும். நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி மட்டுமே, தவான் தனித்துவமாக ஆடுகிறார். ரிஷப்  அடித்து ஆடுகிறார். கேப்டன்சியில் ஸ்ரேயஸ் அய்யர் அற்புதமாகச் செயல்படுகிறார், தனித்துவமான கேப்டன்சி. பொறுப்பை ஏற்றுக் கொண்டு அணியை முன் நடத்திச் செல்கிறார்.  நெருக்கடி தருணத்தில் பேட்டிங்கில் அசத்துகிறார். பந்துவீச்சில் அக்சர் படேல், ரபாடா சூப்பர்.  இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டி பவுலர் என்றே முடிவு கட்டினர், யாரையும்  டெஸ்ட் பவுலர், ஒருநாள் பவுலர், டி20 பவுலர் என்று முத்திரை குத்தக் கூடாது. தற்போது ஐபிஎல்லில் அவர் திறமையை நிரூபித்து வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,Delhi ,Cheppad ,Chennai , Chepauk, Delhi, statistics, Chennai,
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு