×

ஃபானி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ முதல் 185 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

பூரி: வங்கக் கடலில் நிலைக் கொண்ட ஃபானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசாவை நொக்கி சென்று கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில்  மையம் கொண்டுள்ள பானி புயல்  தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தை தொடர்ந்து மிரட்டி வந்த பானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பி நாளை மறுநாள் கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இந்த  நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

அதில்,” புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளது. அதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அந்தந்த மாநில  அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறும் வலியுறுத்துப்பட்டுள்ளது. மேலும் அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தாமும் பிராத்தனை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் பானி புயலை முன்னிட்டு 4  மாநிலங்களுக்கான முன் உதவித்தொகையை மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்துள்ளது.

அதில்,”தமிழகத்திற்கு ரூ.309 கோடி, ஒடிசாவுக்கு ரூ.340 கோடி, ஆந்திராவுக்கு ரூ.200 கோடி மற்றும் மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடியும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் புயல் நிவாரண முன்  உதவித்தொகையாக  நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீக்குளம், விஜயநகரம், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக  இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபோனி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோனி புயல் இரவில் வடக்கு -  வடமேற்கு திசை நோக்கி திரும்பி ஒடிசாவில் கரையை கடக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் கோபால்பூர் - சன்பாலி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.  

ஃபானி புயல், வரும் 3-ம் தேதி நண்பகலில் ஒடிசா மாநிலம் தெற்கு பூரி பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபோனி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ முதல் 185 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோனி புயலின் உச்சபட்ச வேகம் மணிக்கு 205 கி.மீ வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் எச்சரிக்கையை அடுத்து ஒடிசா மாநிலம், பூரி, கேந்தரபாரா, கன்ஜம், கட்டக்,  ஜெய்பூர், பாலசூர் உள்ளிட்ட இடங்களில் புயல் மீட்பு பணிக்காக தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Fanny ,river , Fanny storm, shore, strong wind, weather center warning
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு