×

ஓ.பி.எஸ் பிரசாரம்

சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் 9ம் தேதி வரை முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி நாளை திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 5ம் தேதி சூலூர்  தொகுதியிலும், 7ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 9ம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBS ,campaign , OBS ,campaign
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி