என்டிஆர் சினிமா வெளியிட தேர்தல் ஆணையம் தடை

அமராவதி: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை சித்தரிக்கும் `லட்சுமியின் என்டிஆர்’ என்ற சினிமாவை வெளியிட,  அதன் இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையம்  இத்தடையை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரையில் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று ஆந்திர மாநில தலைமை தேர்தல்  அதிகாரி கோபால் கிருஷ்ண துவிவேதி  தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் என்டிஆர்.ரின் மனைவி லட்சுமி பார்வதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,Election Commission ,NTR , Election Commission ,banned ,release , NTR cinema
× RELATED அலுவலர் பட்டியலை 5 நாளுக்குள் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு