×

லாட்டரி சீட்டு அதிபர் வீடுகளில் ஐடி சோதனை

சென்னை:   கோவை தொழிலதிபர் மார்ட்டின். இவருக்குச் சொந்தமான சொந்தமான கோவையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என 22 இடங்களிலும், சென்னையில்  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள எஸ்எஸ் மியூசிக் அலுவலகம், ராயப்பேட்டையில் உள்ள செனாடாப் சாலையில் உள்ள பழைய  அலுவலகம், தேனாம்பேட்டையில்  உள்ள கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள  மார்ட்டின் மகளுக்கு சொந்தமான அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள கெஸ்ட் அவுஸ்,  அடையாரில் உள்ள மருமகன் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மகன் வீடு, நீலாங்கரையில் உள்ள மகன் வீடு என சென்னை முழுவதும் 10 இடங்களில்  ஒவ்வொரு இடங்களிலும் 10 அதிகாரிகள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் 18 இடங்களிலும், மும்பையில் 5 இடங்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத், கவுஹாத்தி, கேங்டாக், சிலிகுரி, ராஞ்சி ஆகிய  நகரங்களில் உள்ள அலுவலகங்கள் என நாடு முழுவதும் 70 இடங்களில் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது.தமிழகத்தில் 32 இடங்களில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பணம், நகைகளும் சிக்கியதாக  கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலதிபர் மார்ட்டினிடம் கொல்கத்தாவில் ஐடி அதிகாரிகள் நேரடியாக விசாரித்து வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : homes ,Chancellor , The lottery slip , ID ,Chancellor's homes
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை