×

பானி புயல் 3ம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும்

* ஈரப்பதம் போனதால் தகிக்கும் வடமாவட்டங்கள் * வானிலை ஆய்வு மையம்  தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசாவில் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் காற்றழுத்தம் உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு பானி என்ற பெயரிடப்பட்டுள்ளது.  இந்தப் புயல் நேற்று தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் தற்போது நகர்ந்து செல்கிறது. தற்ேபாது அந்த புயல் சென்னைக்கு 500 கிமீ தொலைவில்  மையம் கொண்டு மணிக்கு 22 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. புயல் கடந்து செல்லும் கடல் பாதையில் இன்று மணிக்கு 160 முதல் 170 கிமீ வேகத்தில் கடலில் காற்று வீசும். இந்த புயல் இன்று மாலை தெற்குஆந்திரா கடலோரப்  பகுதிக்கு சென்று பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா நோக்கி பயணிக்கும். 3ம் தேதி ஒடிசாவில் புரி நகர் பகுதிக்கு தெற்கே கோபால்பூர் மற்றும்  சந்த்பலி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 175 கிமீ முதல் 185 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

புயல் சென்னையை கடந்து செல்லும் போது இன்றும் நாளையும் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் கடலோரப் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்.  அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் கடலில் உள்ள தூரத்தை குறிக்கும் புயல் எச்சரிக்கை 2ம் எண் கூண்டு சென்னை  துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதுதிருத்தணியில் எகிறியது 108 டிகிரி ெவயில்: வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரு தீவிரப்புயல் வங்கக் கடலில்  நகர்ந்து செல்லும் நிகழ்வை அடுத்து  தமிழக கடலோரப் பகுதியில் ஈரப்பதம்  உறிஞ்சப்பட்டு கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதையடுத்துதமிழகத்தில்  அதிகபட்சமாக நேற்று திருத்தணியில் 108 டிகிரி  வெயில் கொளுத்தியது. திருச்சி  106 டிகிரி, வேலூர், கரூர்,ம துரை, சென்னை மற்றும் மீனம்பாக்கம் 104  டிகிரி, சேலம் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. அதே நேரத்தில்  தமிழகத்தில் சில இடங்களி–்ல் மழையும் பெய்தது. குறிப்பாக பொன்னேரியில் 80  மிமீ மழை பெய்தது. கன்னியாகுமரி 40மிமீ, மதுரை விமான நிலையம்  20மிமீ,  சோழவந்தான், குளித்துறை, பெரியாறு, உதகமண்டலம் 10 மிமீ மழை பெய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani ,border ,Odisha , Bani storm , Crossing, border , Odisha
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...