×

எர்டிகா புதிய டீசல் கார் மாருதி சுசுகி அறிமுகம்

புதுடெல்லி: நாட்டில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம் செவ்வாயன்று புதிய எரிட்டிகா டீசல் காரை அறிமுகம் செய்துள்ளது. 1.5 லிட்டர் டீசல்  இன்ஜின் திறன் கொண்ட காரின் விலை ₹9.86 லட்சம் மற்றும் ₹11.20 லட்சம் (டெல்லியில் ஷோரூம் விலை) நிர்ணயம் செய்துள்ளது. பியட் நிறுவனம் தற்போது 1.3  லிட்டர் டீசல் திறன் கொண்ட காரை தயாரித்து விற்பனை செய்கிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் திறன் கொண்ட காரின் விலை மூன்று வகையாக ₹9.86 லட்சம், ₹10.69  லட்சம், ₹11.20 லட்சம் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும் என்பதில்  எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று சீனியர் நிர்வாக இயக்குனர் (விற்பனை) ஆர்.எஸ்.கல்சி தெரிவித்தார். மாருதி சுசூகி நிறுவனம் கடந்த நவம்பர் 2018 முதல்  ஏப்ரல் 2019 காலத்தில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட புதிய எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் இதற்கு முன்பு நடுத்தர செடான் சியாஸ் கார், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் திறன் கொண்டதை தயாரித்து அறிமுகம் செய்தது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல்  1ம் தேதிக்குள் தனது டீசல் மாடல் கார்கள் அனைத்தையும் நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maruti Suzuki , Ertiga, new diesel ,car Introduction, Maruti Suzuki
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...