×

தென் மண்டல ஹாக்கி பைனலில் இன்று வருமான வரித்துறை அணியுடன் டைஸ் பெங்களூர் மோதல்

சென்னை: தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் வருமான வரித்துறை - டைஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. மெட்ராஸ் ஒய்எம்சிஏ - செயின்ட் பால்ஸ் மனமகிழ் மன்றம் இணைந்து 2வது தென்மண்டல அளவிலான ஹாக்கிப் போட்டியை நடத்தி வருகின்றன. இதில் தெற்கு ரயில்வே, செயின்ட் பால்ஸ், ஐசிஎப், அசோக் ஹாக்கி அகடமி, பாண்டிச்சேரி ஹாக்கி சங்கம் உட்பட 13 அணிகள் பங்கேற்றன. சென்னை எழும்பூர் ஹாக்கி விளையாட்டரங்கில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் காலிறுதிப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைப்பெற்றன. இந்தியன் வங்கி 4-3 என்ற கோல் கணக்கில் எஸ்டிஏடி கோவில்பட்டி அணியையும், டைஸ் பெங்களூர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை காவல்துறை அணியையும் வீழ்த்தின. ஜிஎஸ்டி சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை ஹாக்கி சங்க அணியையும், வருமான வரித்துறை அணி 5-0 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரியையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில்  டைஸ் பெங்களூர் - இந்தியன் வங்கி அணிகள் மோதின. அதில்  டைஸ் பெங்களூர் 2-1 கோல்  கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2வது அரையிறுதியில்  ஜிஎஸ்டி சென்னை - வருமானவரித் துறை அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை நிலவியதால், பெனால்டி ஷூட் கடைப்பிடிக்கப்பட்டது.

அதில்  வருமான வரித்துறை 3-2என்ற கோல் கணக்கில்  ஜிஎஸ்டி சென்னை அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று மாலை நடைபெறும் பைனலில் வருமான வரித்துறை - டைஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. முன்னதாக 3வது ,4வது இடங்களுக்கான போட்டியில் இந்தியன் வங்கி - ஜிஎஸ்டி சென்னை அணிகள் விளையாடுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dais Bangalore ,clash ,income tax department ,hockey final ,South Zone , South Zone, Hawk, Final, Income Taxes, Conflict
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...