×

ஜப்பான் மன்னர் பதவி விலகல்: துவங்கியது பாரம்பரிய சடங்கு

டோக்கியோ: ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ, வயதாகி விட்டதால் பதவியில் இருந்து விலகுகிறார். ஜப்பானின் 125வது மன்னர் அகிஹிட்டோ (85). நாட்டு மக்கள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல் பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அகிஹிட்டோ மன்னர் பதவியில் இருந்து விலக குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான பாரம்பரிய சடங்குகள் நேற்று தொடங்கியது.

அகிஹிட்டோ மன்னர் பதவியில் இருந்து விலகியதும், மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ மன்னராக முடிசூட்டப்படுவார். இந்த சடங்கு முறைகளில், மன்னர் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றாலும் கூட, இதைப் பற்றிய செய்திகளை அறிவதற்காக நேற்று டோக்கியோவில் உள்ள அரண்மனை முன்பு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியது இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Japan ,resignation , Japan, king, promotion, dissociation
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...