×

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னை: நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வு மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த பிளஸ்1க்கான துணைத் தேர்வுகளில்  தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள், வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள சிறப்பு துணைத்  தேர்வு எழுத தற்ேபாது விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகளில் ஒன்றிரண்டு பாடங்களில் தோல்வி அடையும் மாணவ, மாணவியருக்காக  ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடக்க உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள்,  கடந்த 2018 ஜூன் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வராதவர்கள் தற்போது நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்கலாம்.  

பழைய பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்  மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். மே 3ம் தேதி பிற்பகல் முதல் மே 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 6ம் தேதி முதல் 13ம்  தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் நடக்கும். இவற்றுக்கான அட்டவணைகள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம். தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subcommittee ,Individuals , Plus 1, Plus 2 Special Subcommittee, Individuals
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!