அதிதீவிர புயலாக மாறிய ஃபோனி...... பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை ஒத்திவைத்தது விமானப்படை

டெல்லி: ஃபோனி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் இந்த வாரம் நடத்தப்பட இருந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப்படை ஒத்திவைத்துள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபோனி புயல் ஒடிசாவின் கடலோர பகுதியான கோபால்பூர்-சந்த்பலி இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என்றும், அதிகபட்சமாக 205 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது முதலில் தமிழகம்-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தை மிரட்டி வந்த ஃபானி புயல் தற்போது ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ளது. இதனிடையே ஃபானி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்நிலையில் ஃபோனி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் இந்த வாரம் நடத்தப்பட இருந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப்படை ஒத்திவைத்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: