×

இலங்கையில் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்: அதிபர் சிறிசேனா உத்தரவு

கொழும்பு: இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகத்தப்பட்டது. இதில் 250–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குண்டு வெடிப்பை தொடர்ந்து, வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக  பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்கி இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களை பொறுப்பாக கையாள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,Sirisena , Sri Lanka, social media, President Maithripala Sirisena
× RELATED இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்