×

புதுச்சேரி ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்தது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போல் துணை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் உள்ளன. அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவுகளை ஆளுநர் கிரண்பேடி பிறப்பிக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகராக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, அதிகாரிகளிடம் அரசு ஆவணங்களைப் பெறுவது, ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பிப்பது என மாநில அரசின் அதிகாரங்களில் துணை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு உள்ளது. எனவே, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லாது என அறிவிக்குமாறு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation ,governor ,Puducherry ,Chennai High Court , Puducherry Governor Kiranbedi, Central Government, Chennai High Court
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...