×

எஸ்.புதூர் ஒன்றியத்தில் தார்பாயில் தண்ணீர் சேகரித்து விவசாயத்திற்கு பாய்ச்சும் அவலம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் மலைகள் நிறைந்தும் நான்கு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஒன்றிய பகுதி பசுமை நிறைந்து காணப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் 30 அடியிலேயே நல்ல தண்ணீர் இருந்தது. வானம் பார்த்த பூமியான இங்கு தோட்டப்பயிர்களான மிளகாய், கத்தரி, வெண்டை, புடலை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு திருச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொடர்ந்து பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக உள்ளது. ஒருசில இடங்களிலுள்ள போர்வெல்லில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளதால் வறட்சியில் வளரும் மிளகாய் செடிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். இதற்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால் போர் வெல் அருகிலேயே இரண்டு அடி ஆழத்தில் பெரிய குழிவெட்டி இதில் தார்பாய் கொண்டு தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. போர்வெல்லில் இருந்து வரும் குறைந்த அளவு தண்ணீரை இரண்டு நாட்கள் சேமித்து அவற்றை மீண்டும் மோட்டார் மூலம் ஒரே நேரத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் வருமானமின்றி அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saputur Union , Water, agriculture
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...