×

பாம்பன் பாலத்தில் பரபரப்பு: கடலில் குதித்தார் கள்ளக்காதலன்... குதிக்காமல் காப்பாற்றினார் கள்ளக்காதலி

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் கள்ளக்காதலன். தானும் குதிக்க மறுத்த கள்ளக்காதலி, மீனவர்களை அழைத்து கள்ளக்காதலனை காப்பாற்றிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மதுரையில் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் பகுதியில் வசித்து வரும் நண்பர் கார்த்திக் பாபுவின் மனைவி திவ்யாவுடன் (27) நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. கார்த்திக்பாபுவுக்கு 2 குழந்தைகள் உள்ளன. வெங்கடேஷ் - திவ்யா கள்ள உறவு குறித்து தெரிந்ததும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் தலைமறைவாக கள்ளக்காதல் ஜோடி முடிவு செய்தது.

கடந்த 27ம் தேதி வெங்கடேஷ், திவ்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். திண்டுக்கல், சேலம், ஒகேனக்கல் பகுதிக்கு ஜாலியாக சென்று பல்வேறு இடங்களில் உல்லாசமாக இருந்தனர். நேற்று காலை ராமேஸ்வரம் வந்த ஜோடி, தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பினால் பிரச்னை ஏற்படும் என்பதால், இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று மாலை பாம்பன் பாலத்திற்கு சென்றனர். பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிட்டபடி முதலில் வெங்கடேஷ் கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று கடலில் குதித்தார். ஆனால் தொடர்ந்து திவ்யா கடலில் குதிக்காமல், கடலில் குதித்த வெங்கடேஷை காப்பாற்றுமாறு அந்த வழியாக சென்றவர்களிடம் கோரினார். பாம்பன் கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் உடனே நாட்டுப்படகில் சென்று கடலில் தத்தளித்த வெங்கடேஷை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் கிடைத்த பாம்பன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரையும் அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,Pampan ,climber ,sea , Pamban, Kallakadalan, Kallakadali
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்