×

சிறுமிக்கு திருமணம்: போலீஸ் விசாரணை

திருத்தணி: மணப்பெண் சிறுமி என புகார் வந்ததை அடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது திருத்தணியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பட்டாபிராமபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராதா. இவருடைய மகன் குமரேசன். அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் மகள் கஸ்தூரி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

குமரேசனுக்கும், கஸ்தூரிக்கும் கோவிலில் வைத்து நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து, திருத்தணி - திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் வைத்து நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே, மணப்பெண் சிறுமி என்றும் 17 வயது தான் ஆகிறது எனவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திடுக்கிட்ட அவர், திருத்தணி சமூகநலத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மண்டபத்திற்கு உடனே சென்று விசாரிக்க உத்தரவிட்டார்.

சமூலநலத் துறை அதிகாரிகளும், ஊழியர்கலும் திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றனர். அங்கு மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் தீவிரமாக விசாரித்தனர். அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அனைவரும் திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தீவிர விசாரணை தொடருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police investigation , Girl, marriage, police, investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை