×

பில்லூர் அணை திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் திடீர் வெள்ளம்: சிக்கித்தவித்த 110 பேர் மீட்பு

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை திறக்கப்பட்டதால்  பவானி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கோயில் கிடா வெட்டுக்கு வந்த 110 பேர் தண்ணீரில் சிக்கி தவித்தனர். கோவை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் கிடா வெட்டு விருந்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். மதியம் விருந்து முடிந்ததும் தேக்கம்பட்டி  பம்ப்அவுஸ் அருகே பவானி ஆற்றில் இறங்கி சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம்  மாலை 4 மணிக்கு பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. இதனால், குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பலர்ஆற்றின் மறுகரைக்கு தப்பினர். மேலும், சிலர் ஆற்றின் நடுவே மேடான பகுதியில் ஏறிக்கொண்டனர். இதைப்பார்த்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயைணப்பு படையினர், ஆற்றில் சிக்கி இருந்தவர்களை மீன்பிடி பரிசல்காரர்கள் உதவியுடன் மீட்டனர். மேலும் பலரை கயிறு கட்டி மீட்டனர். மாலை 5 மணிக்கு துவங்கிய மீட்பு  பணி இரவு 7 மணி வரை நீடித்தது. 110 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Beyonce ,flooding ,river ,Bhavani , Pillar dam,flood, Bhavani river
× RELATED மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு