சென்னை, மதுரை ஐகோர்ட் விடுமுறைகால நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை-மதுரை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை கால நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை நாட்களாக மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை தாக்கல் செய்யவும், அவற்றை விசாரிக்கவும் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுத் தாக்கல் செய்வதற்கும், அவற்றை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் சிறப்பு அமர்வு நீதிபதிகள் விசாரிக்கவும் நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 16 நீதிபதிகளும், மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மே 1 முதல் 10 வரையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர், மே 8, 9, மே 11 முதல் 19 வரையிலான அமர்வில் நீதிபதிகள்  சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி, வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் மே 15, 16லும், மே 20 முதல் 26 வரையிலான அமர்வில் நீதிபதிகள் ஆர்.எம்.ட்டி.டீக்காராமன், ப்பி.டி.ஆதிகேசவலு, ப்பி.ராஜமாணிக்கம், சி.சரவணன் ஆகியோர் மே 22, 23லும் மே 27 முதல் ஜூன் 2 வரையிலான அமர்வில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பிடி.ஆஷா, எம்.நிர்மல்குமார், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் மே 29,30லும் வழக்குகளை விசாரிப்பார்கள்.

மதுரை கிளை உயர் நீதிமன்றம்:
மே 1 முதல் 10 வரையிலான அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி, கிருஷ்ணவள்ளி ஆகியோர் மே 8, 9-லும்.
மே 11 முதல் 19 வரையிலான அமர்வில் நீதிபதிகள்  ஜெ.நிஷா பானு, எம்.தண்டபாணி, பி.புகழேந்தி ஆகியோர் மே 15, 16லும், மே 20 முதல் 26 வரையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.ஹேமலதா, எஸ்.ராமத்திலகம் ஆகியோர் மே 22, 23லும். மே 27 முதல் ஜூன் 2 வரையிலான அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.தாரணி, ஆர்.பொங்கியப்பன் ஆகியோரும் மே 29, 30லும் வழக்குகளை விசாரிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,vacation judges ,Madras , Madurai, Madurai, Holidays, Judges, Appointment
× RELATED மதுரை நகருக்குள் வைகையின் பரப்பளவு...