×

மோடியை எதிர்த்து மாஜி வீரர் போட்டி

லக்னோ: எல்லையில் வீரர்களுக்கு தரக்குறைவான உணவு வழங்கப்படுவதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். ராணுவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டதற்காக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மே 19ம் தேதி இறுதி கட்டத்தில் தேர்தலை சந்திக்கும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி தரப்பில் இவர் களம் இறக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் இத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்தது. இதனையொட்டி நேற்று அவரை வேட்பாளராக சமாஜ்வாடி தலைமை அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Contest ,Modi , Modi, opposing, magic player, competition
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி