×

ஈரோடு ரியல் எஸ்டேட் அதிபர் மாணவியின் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பினாரா? போலீசார் ரகசிய விசாரணை

ஈரோடு: ஈரோடு ரியல் எஸ்டேட் அதிபர்  ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவியை மிரட்டி  எடுத்த ஆபாச  வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பினாரா என்பது குறித்து ஈரோடு போலீசார் ரகசியமாக  விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு  முன் கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் மிரட்டி ஆபாச வீடியோ  எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே பாணியில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்  ராதாகிருஷ்ணன் (37) ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் புகாரின்படி   ஈரோடு மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

கல்லூரி மாணவியை மிரட்டி எடுத்த ஆபாச வீடியோக்கள் உள்ள ராதாகிருஷ்ணனின் செல்போன், லேப்டாப் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் சோதனை செய்தபோது, ஆபாச வீடியோக்கள் எதுவும் இல்லை. ஆனால், சில போட்டோக்கள் மட்டும் இருந்துள்ளது. இதனால் வீடியோக்கள் குறித்து ராதாகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில், அனைத்து வீடியோக்களையும் அழித்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்களை அவர் மறைத்து வைத்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்றதால், அவரும் அவரது  நண்பர்களும் கூட்டாக சேர்ந்து ஏராளமான கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை நாசமாக்கியிருக்கலாம். இவற்றை வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்க கூடும் என தெரிகிறது. எனவே அவரது நண்பர்கள் யார்? அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோக்கள் உள்ளனவா? என்பது குறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜ்களில் உள்ளூர்காரர்களுக்கு எளிதில் ரூம் தரமாட்டார்கள். ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால்  ராதாகிருஷ்ணன் தொடர்ந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே ரூம் எடுத்து தங்கி கல்லூரி மாணவியை அழைத்து சென்றதால், போலீசாருக்கு லாட்ஜ் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் தனது பெயரில் தான் ரூம் பதிவு  செய்தாரா? அவருக்கு ஏதேனும் நிரந்தர ரூம் உள்ளதா? என்பது  குறித்தும், அவர், அந்த லாட்ஜிக்கு கல்லூரி மாணவிகளை மட்டும் தான் அழைத்து  வந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து நான்கு  ஆண்டுகளாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்களை அவர் மறைத்து வைத்திருக்க கூடும் என கருதப்படுகிறது

இளம்பெண்களை வீழ்த்தியது எப்படி?

ராதாகிருஷ்ணன் வசதியாக வாழ்ந்து வந்ததால், எந்த வேலையும்  செய்யாமல் காலை, மாலை நேரத்தில் தினமும் குறிப்பிட்ட கல்லூரி அருகே உள்ள டீக்கடையில் டிப் டாப் உடை அணிந்து முகாமிடுவார். அப்போது, மாணவிகளிடம் நைசாக பேச்சுக்கொடுத்து அவர்களை வர்ணிப்பாராம். அவரது பேச்சில் மயங்கும் பெண்களை மிகவும் மரியாதையாக நடத்தி, செல்போன் எண்களை வாங்கி பேசி பழகுவார். சில நாள் கழித்து அந்த பெண்ணை வெளியூருக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும்  இளம்பெண்களிடம் ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய செல்வந்தர் போல காட்டி அவர்களை கவர்ந்துள்ளார். அவர்களின்  குடும்ப சூழ்நிலை, வறுமையை கேட்டறிந்து சிறுசிறு உதவிகளை செய்வாராம். அதையே சாதகமாக பயன்படுத்தி, பல பெண்களை நாசப்படுத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தராததால் தொடர்ந்து பலரை வலையில் வீழ்த்தியுள்ளார். இதில், கல்லூரி மாணவி மட்டும் புகார் தந்ததால், வசமாக சிக்கி கொண்டார். போலீசாரும் இத்துடன் வழக்கை முடித்து விட்டனர். பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார்  அளிக்க முன்வந்தால் ராதாகிருஷ்ணன் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம் என போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : friends ,real estate chancellor ,investigations , Real estate principal, student, porn videos, porn videos Police, secret, investigation
× RELATED சோழவந்தானில் இருந்து செல்ல...