×

ஓட்டுக்காக ஓபிசி ஆன மோடி தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பிறப்பில் உயர்சாதியைச் சேர்ந்தவர், ஆனால் ஆவணங்களில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் அராரியா மக்களவைத் தொகுதியில் கடந்த 20ம் தேதி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரம் முன்னதாக தேஜஸ்வி யாதவ் தன்னுடைய டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி இன்று பீகார் வருகிறார். அவர் தன்னை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக காட்டிக் கொள்வார். இதன் மூலம் மக்களின் கவனத்தை சிதறடித்து வாக்குகளை பிரிக்க முயற்சிப்பார்’ என குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியதுபோன்று  சனிக்கிழமை உபி.யில் கன்னோஜ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மோடி, தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் அல்ல. மாறாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவன். அதி பிச்டா’ வகுப்பை  சேர்ந்தவன் என்று கூறினார். இந்நிலையில் தேஜஸ்வி வெளியிட்டுள்ள டிவீட்டில், தன்னை பிசியில் இருந்து ஓபிசி.யை சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி பேசுவார் என்று கூறியது உண்மையாகி உள்ளது. ஓட்டுகளை பெற மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார்’ என்றுகூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,OBC ,Tejaswi Yadav , Vote, OBC, Modi, Tejasvi Yadav, indictment
× RELATED வேலையில்லா திண்டாட்டம், கல்வி,...