காங்கிரஸ் கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைக்கும்: ப.சிதம்பரம் பேட்டி

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பா.ஜ.வின் பிரிவினை பிரசாரம் தென் இந்தியா, குஜராத், கோவா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் முழு தோல்வியடைந்துள்ளது. மத்திய மாநிலங்களான ராஜஸ்தான், அரியானா, மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்றவற்றில் இது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இனிமேல்தான் தெரியவரும். மேற்குவங்கத்திலும் அவர்கள் மக்களை பிரிக்க முயற்சித்தார்கள்.

ஆனால் இதுவரை வெற்றி பெறவில்லை. ஒடிசாவிலும் இதேபோல் முயற்சித்தார்கள். அங்கும் வெற்றிபெற முடியவில்லை. தற்போது அசாமில் முயற்சிக்கிறார்கள். அங்கு முடிவு எப்படியிருக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.வின் பிரிவினைவாத பிரசாரம் தோல்வியடைந்துள்ளது.

மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மதநல்லிணக்கம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தீவிரவாத ஊடுருவலும், உயிர்ப்பலியும் மோடி ஆட்சியில் அதிகரித்தன. மோடி ஆட்சி முற்றிலும் பேரழிவுதான். அடுத்து பா.ஜ கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்காது என்பதில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். அடுத்த அரசு பா.ஜ அல்லாத அரசாக இருக்கும். இதில் தேர்தலுக்கு முன் அமைக்கப்பட்ட ஐ.மு கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு பின், சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேர்ந்தால், ஐ.மு கூட்டணி 3வது ஆட்சி அமைய நல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,interview ,P. Chidambaram , Congress coalition, 3rd time, rule, p. chidambaram, interview
× RELATED மத்திய அரசை ஆழமாக விமர்சித்த ஒரே...