×

காம்பீருக்கு செக் வையுங்க... கதறும் ஆம் ஆத்மி

பாஜ.வில் சேர்ந்த கையோடு கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர். கிரிக்கெட்டில்தான் இவர் அதிரடி காட்டுவார் என்று பார்த்தால் அரசியலிலும் அப்படித்தான் போலும். வேட்புமனுத் தாக்கல் செய்த வேகத்தில் இவர் பிரசார களத்திற்கு வந்து விட்டார். இவருக்கு எதிராக கிழக்கு டெல்லி மக்களவை ெதாகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அடிஷி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அர்விந்தர் சிங் லவ்லி நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பு மனுபரிசீலனையின் போதே இருவரும் சேர்ந்து காம்பீருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அவருடைய பிரமாண பத்திரத்தில் தேதி மாறியிருக்கிறது. இதை ஏற்கக்கூடாது என்று புகார் அளிக்க தேர்தல் அதிகாரி பிற்பகல் 3 மணி வரை காம்பீர் மனுவை நிறுத்தி வைத்திருந்தார். பின் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மனு ஏற்கப்பட்டது.

இப்போது புது புகார். காம்பீரிடம்  கரோல் பாக், ராஜேந்திர நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. தேர்தல் நடைமுறை சட்டப்படி இது செல்லாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு புகார்களை தொடர்ந்து ஆம் ஆத்மி தேர்தல் கமிஷனுக்கு தட்டிவிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் கிழக்கு டெல்லி தொகுதியில் காம்பீர் தேர்தல் பிரசார பேரணி நடத்துகிறார். இதற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதனாலும் ஆம் ஆத்மி கலங்கிப்போய் உள்ளது. அனுமதி இல்லாமல் பேரணி நடத்துகிறார் அவரை விடாதீக... என்கிற ரேஞ்சுக்கு மீண்டும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும் பிட்நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக அடுத்த புகாரை அளித்துள்ளது ஆம் ஆத்மி. ‘‘வாக்காளர்களிடம் விநியோகிப்பட்டு வரும் பிட் நோட்டீஸ்களில் அதை அச்சிட்டவர் பெயர் போன்ற தகவல்கள் இல்லை’’ என்றெல்லாம் புகார்களை அள்ளிவிட்டு வருகிறது ஆம் ஆத்மி.
இரண்டு தொகுதிகளில் வாக்காளர் பெயர் இருந்தால் தகுதியிழப்பு செய்யலாம் என்று தேர்தல் கமிஷனில் விதி உள்ளதால் பயந்துவிட்டார் காம்பீர்.

‘ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  பெயர் உள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. எனக்கு ராஜேந்திர நகரில்  மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் குழந்தையாக இருக்கும்போது எனது தாய் மாமன் வீட்டில் (கரோல் பாகிலுள்ள ராம்ஜாஸ் நகர்) வசித்து  வந்தேன். நான் எப்போதும் பெயரை சேர்க்கக் கோரி விண்ணப்பித்தது இல்லை. அந்த தொகுதியில் பெறப்பட்ட வாக்காளர் அட்டையை பயன்படுத்தி வாக்களித்ததும்  இல்லை’’ என காம்பீர் விளக்கம் அளித்தார். மொத்தத்தில் கிழக்கு டெல்லி தொகுதி தேர்தல் களம் காம்பீரால் கலகலத்துப்போய் உள்ளது.

புகார் வரட்டும் பார்ப்போம்

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறியதாவது: ஊடகங்கள் மூலம் காம்பீர் வாக்காளராக ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புகார் எதுவும் தேர்தல் ஆணையத்திடம் வரவில்லை. புகார் கிடைக்கப் பெற்றால், விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gambar , Gambhir, Czech, Aam Admi
× RELATED செங்கல்பட்டில் பரபரப்பு: காதல்...