×

நைட் ரைடர்சை கலவரப்படுத்திய ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிறிஸ் கேல், ரஸ்ஸல், டி வில்லியர்ஸ், போலார்டு போன்ற வெளிநாட்டு வீரர்களின் விளாசலுக்கு தான் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை என்பதை ஹர்திக் ஆட்டத்துக்கு ஆட்டம் நிரூபித்து வருகிறார். கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த கேகேஆர் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் குவித்து மிரட்டியது (கில் 76, லின் 54, ரஸ்ஸல் 80*, கார்த்திக் 15*).

அடுத்து 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், 6வது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவின் ஆக்ரோஷமான ஆட்டம் நைட் ரைடர்சை கலங்க வைத்தது என்றால் மிகையல்ல. 17 பந்தில் அரை சதம் அடித்த ஹர்திக், 91 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி கர்னி பந்துவீச்சில் ரஸ்ஸலிடம் பிடிபட்ட பின்னர்தான் கொல்கத்தா வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து தோற்றாலும், ஹர்திக்கின் அதிரடி ஆட்டம் அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harrdik Pandya ,knight riders , Harrdik Pandya,knight riders
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...