×

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாக்களிப்பு

டெல்லி: மக்களவைக்கு இன்று 4ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில், ஒடிசா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 303 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. கடைசி 3 கட்டங்களில் 168 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதுவரை நடந்த 3 கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் பெரியளவில் வன்முறைகள், முறைகேடுகள் நடக்கவில்லை. ஆந்திராவில் மட்டும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சில இடங்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பின்னர், அவை மாற்றப்பட்டும், கோளாறு சரி செய்யப்பட்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில், 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று 4ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 6 மக்களவை தொகுதிகளுடன், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. பீகாரில் 5 மக்களவை தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மகாராஷ்டிரா 17,  ராஜஸ்தான் 13, உத்தர பிரதேசம் 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே  ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள்:

மக்களவை தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவின் ஹேம மாலினி மற்றும் மகள்கள் ஈஷா தியோல், அஹானா தியோல், பாஜ.வை சேர்ந்த மூத்த தலைவர்களான பாபுல் சுப்ரியோ, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே,மத்திய பிரச்தேச முதல்வர் கமல்நாத், புனம் மாகாராஜன், பரேஷ் ராவால், கன்னையா குமார் (சிபிஐ), நடிகை ஊர்மிளா மடோன்கர் (காங்கிரஸ்), தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது கணவர் சுபின் இரானி ஆகியோர் வாக்களித்தனர்.

தொழிலதிபர், சினிமா பிரபலங்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், தொழிலதிபர் அனில் அம்பானி, HDFC தலைவர் தீபக் பரேக், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், மூத்த நடிகைகள் ரேகா, சுபா கோட்டே, நடிகர் மாதுரி தீட்சித், நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ், பாக்யஸ்ரீ மற்றும் சோனாலி பெண்ட்ரே, அக்தர் அனுபீர் கெர்,பிரியா தத்து, அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் & ஐஸ்வர்யா ராய் பச்சன், கரீனா கபூர் கான், நடிகர் சல்மான் கான், கங்காணா , பட இயக்குநர் மதுர பண்டார்கர் மற்றும் அவரது மனைவி ரெனு நம்பிடிரி ஆகியோர் வாக்களித்தனர்.

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 2 மணி நிலவரப்படி மொத்தமாக 38.63% வாக்குகள் பதிவு

பீகார்- 37.71%
ஜம்மு-காஷ்மீர்- 6.66%
மத்திய பிரதேசம்- 43.44%
மகாராஷ்டிரா- 29.93%
ஒடிசா- 35.79%
ராஜஸ்தான் - 44.62%
உத்தரபிரதேசம் - 34.42%
மேற்கு வங்கம் - 52.37%
ஜார்க்கண்ட் - 44.90% வாக்குகள் பதிவாகின.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,leaders ,4th Lok Sabha ,celebrities , 4th Lok Sabha Election: Political Leader, Cinema Celebrities Voting
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...