×

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த அவசியமில்லை : சத்யபிரதா சாஹூ தகவல்

சென்னை : அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் புகார் வைத்து இருந்தது.

ஐந்திற்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி முறைகேடு செய்தனர் என திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கலவரம் நடந்த இடங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா  உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பொன்பரப்பில் வாக்குப்பதிவின்போது எவ்வித கலவரமும் நடக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவு அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவு நடத்த எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் வட்டாட்சியர் சம்பூரணம் சென்றது குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரி நடராஜன் அறிக்கை சமர்பித்துள்ளதாக தெரிவித்த அவர், சபாசநாயகரை அமைச்சர் மற்றும் அரசு கொறடா சந்தித்தது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை, சந்திப்பு தொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bonaparte , Recreation, Rehabilitation, Satyabrata Sahoo
× RELATED பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு...