×

புதுமை காலனியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பால்கனியில் விரிசல்

ஈரோடு: புதுமை காலனியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பால்கனியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரோடு மாநகராட்சி உட்பட்ட புதுமை காலனியில் குடிசைமாற்று வாரியத்தால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, எளிய மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த பிளாக்கில் மொத்தம் உள்ள, 180 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

கட்டிடம் பழுதாகி ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுக்கு முன் பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்தனர். ஆனால், இந்த பராமரிப்பு பணிகளையும் அவர்கள் முறையாக செய்யாததால், அடுத்த சில ஆண்டிலேயே கட்டிடங்களின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. பல பகுதிகளில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. கடந்த ஆண்டு புதுமை காலனியில் உள்ள இ பிளாக்கில் உள்ள 3-வது மாடியின் பால்கனி சுவர் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது.

இதேபோல் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் அனைத்து பால்கனியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இடிந்து விழுந்த பால்கனியையும், அபாயகரமாக உள்ள கட்டிடத்தையும் சீரமைத்து கொடுக்க வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.  ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து புதுமைகாலனியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இதே மாதம் தான் இ பிளாக்கில் உள்ள பால்கனி இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் யாரும் வெளியில் விளையாடாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும், வெளியே நிறுத்தியிருந்த 2 சைக்கிள் முற்றிலும் சேதமானது. இந்த பால்கனி இடிந்து விழுந்த கட்டிடம் மட்டுமன்றி புதுமைக்காலனியில் உள்ள அனைத்து கட்டிடம் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில்தான் உள்ளது. தற்போது பெய்யும் சிறிய மழைக்கே ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. பெரும் அசாம்பாவிதம் நடப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : balcony ,cottage board resort , Concrete, innovation colony, hut alternative board residence, balcony, cottage exchange board
× RELATED கொல்கத்தாவில் லார்ட்ஸ் பால்கனி!