×

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஐயன் கோயிலில் விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள அலங்காரிபாளையம் ஐயன்கோயிலில் விஷ ஜந்துக்களின் உருவ பொம்மையை உடைத்து வழிபடும் விநோத பண்டிகை நடந்தது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐயன்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 5-வது ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பண்டிகை நடக்கும். 3 மற்றும் 4-வது வாரங்களில் பக்தர்கள் அதிக அளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பாம்பு, தேள், பூரான், பல்லி, சிலந்தி, கிராந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விஷ ஜந்துகளின் உருவங்கள் மண்ணால்  செய்யப்பட்டு 1 செட் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. பக்தர்கள் விஷ ஜந்துகளின் உருவ பொம்மைகளை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயில் முன்பகுதியில் கற்பூரமேற்றி உருவ பொம்மைகளை உடைத்தனர்.

இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்தும் பக்தர்கள் நேற்று வந்து வழிபட்டுச் சென்றனர். இக்கோயிலில் சாம்பல் விபூதியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crews ,Pinjitipuliyampatti ,Iron Temple , Shiva Vibhuti, Iyer Temple, Vishu Jandu, Shiva, worship
× RELATED நீடாமங்கலம் பகுதி கொள்முதல்...