×

தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் குவியும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றில் பக்தர்கள் போடும் பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத இறுதியில் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் இரவு-பகல் என கொண்டாடப்படும். இவ்விழாவில் தேனி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இச்சித்திரை திருவிழாவையொட்டி கோயிலில் கம்பம் நடும் விழா கடந்த வாரம் நடந்து. கம்பம் நட்டதையடுத்து கம்பத்திற்கு புனித நீருற்றவும், அங்கப்பிரதட்சனம், ஆயிரம் பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற நேர்த்திக்கடன்கனை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் தற்போது கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் முல்லையாற்றிற்கு சென்று, அங்கு குளித்துவிட்டு வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். முல்லையாற்றுக்கு செல்லும் பக்தர்கள் பூ, பழம், போன்றவற்றை வாங்கும்போது, கடைக்காரர்கள், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் பூஜை பொருள்கைள வைத்து தருகின்றனர். இந்த பாலீத்தின் பைகளை வாங்கிச்செல்லும் பக்தர்கள் முல்லையாற்றில் குளித்து விட்டு,  பூஜை செய்து விட்டு. இந்த பாலித்தீன் பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்கின்றனர்.

இத்தகைய பாலீத்தீன் பைகள் முல்லையாற்றங்கரையில் குவியல், குவியலாக குவிந்து வருவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உருவாகி உள்ளது. பாலீத்தீன் ஒழிப்பு குறித்து உள்ளாட்சித் பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடடுவரும்நிலையில் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம்அருகே ஓடும் முல்லையாற்றின்கரையில் ஏற்படும் சுகாதாரக் கேட்டை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் பாலீத்தீன் விநியோகத்தை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Theni ,Weerawandy Mullaiyar , Theni, Mullaiyar, devotees, polyteen bags, Gowmariamman Temple
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்