×

மே 1-ல் லட்சுமி என்.டி.ஆர் படம் வெளியீடு: இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்தியாளர்களை சந்திக்க தடை

ஐதராபாத்: பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து ஆந்திர போலீசார் சிறைவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை மையமாக வைத்து லட்சுமி என்.டி.ஆர் என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், மே ஒன்றாம் தேதியன்று, ஹைதராபாதில் உள்ள என்டிஆர் சதுக்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார்.

இதனையடுத்து விஜயவாடாவில் நடைபெறவிருந்த இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க படக்குழுவினருடன் ராம் கோபால் வர்மா சென்றார். விஜயவாடா விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சட்ட ஒழுங்கு காரணங்களுக்காவும்,தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொது இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கான அனுமதி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

இப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ராம்கோபால் வர்மாவை ஆந்திராவுக்குள் வரவிடாமல் தடுக்க தெலுங்குதேசம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.போலீசார் காவலில் வைக்கப்பட்டிருந்த ராம் கோபால் வர்மா, உண்மையை பேசியதற்காக தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவில் ஜனநாயகம் இல்லை எனவும் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டாளார். பின்னர் அவர் விமானம் மூலம் ஐதரபாத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lakshmi NTR ,Ram Gopal Varma ,journalists , May 1, Lakshmi NTR film, director Ram Gopal Varma, journalists,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கை ஸ்டான்லி...