×

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு...... நடிகர் விஷால் ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கணக்கு வழக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கபபட்டது. இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளின் அடிப்படையில், சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டது.

அரசு அந்த அறிக்கையின் படி விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டிஸ் அனுப்பியது. கொடுக்கப்பட்ட 30 நாள் அவகாசத்தில் விஷால் தரப்பினர் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தைக் கலைத்து தமிழக அரசு உததரவிட்டது. மேலும் சங்க நிர்வாகத்தை கவனிக்க சேகர் என்ற அதிகாரியையும் நியமித்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது சட்டவிரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : officer ,Producers Association ,Vishal Court , Producer council, actor Vishal,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு...