×

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்...... அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு தேமுதிக உதவும் என அவர் கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி நடை  பெற்று வருகிறது. இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஆகும். நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

மே 2ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி  நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக  சார்பில் சூலூர்- வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சி- செந்தில்நாதன், திருப்பரங்குன்றம்- எஸ்.முனியாண்டி, ஓட்டப்பிடாரம்(தனி)- பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Vijayakanth ,AIADMK , Legislative Assembly, by-elections, AIADMK, DMDK, Vijayakanth,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை