×

முதுகு தண்டில் கடும் பாதிப்பு முஷாரப் பாகிஸ்தான் திரும்ப வாய்ப்பில்லை: வக்கீல் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆணடு வரை அதிபராக இருந்தார். 2007ம் ஆண்டு இவர் அரசியல் சாசன சட்டத்தை தற்காலிமாக  நிறுத்தி வைத்து விட்டு அவசரநிலையை அமல்படுத்தினார்.     இதற்காக இவர் மீது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், முஷாரப் மீது கடந்த 2014ம் ஆண்டு தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தியது. மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016ம் ஆண்டு துபாய் சென்ற முஷாரப், அதன்பின் நாடு திரும்பவில்லை.

முஷாரப்புக்கு முதுகு தண்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரிய வகை நோய் தாக்குதல் காரணமாக அவர் கடந்த மாதம் துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், தேசத்துரோக வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் மே 2ம் தேதி ஆஜராக வேண்டும் என முஷாரப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. இது குறித்து பேட்டியளித்த முஷாரப்பின் வக்கீல் சல்மான் சப்தர், ‘முஷாரப்புக்கு முதுகுதண்டில் கடுமையான பாதிப்பு இருப்பதால், அவரை பயணம் செய்ய வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முஷாரப் நாடு  திரு்ம்ப இப்போைதக்கு வாய்ப்பில்லை’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Musharraf ,Pakistan , Severe damage,spinal cord, Musharraf
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்