×

ஏம்ப்பூ... ‘மோடி’ன்னா தேசியவாதமா?: பிரியங்கா கேள்வி

அமேதி: தேசியவாதத்தை முன்னிறுத்தி பா.ஜ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் பல கோஷங்கள் எழுப்பப்படுகிறது. அதில் ஒன்று ‘மை ஹூ மோடி (நான் மோடியாக இருக்கிறேன்)’. இதை பிரியங்கா கிண்டல்  செய்துள்ளார்.  உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் அமேதி தொகுதியில் நேற்று பிரசாரத்துக்கு சென்ற பிரியங்கா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘நான் மோடி’ என்பது என்னவிதமான தேசியவாதம்? தேசியவாதத்தின் அர்த்தம் என்ன? நாட்டின் மீது அன்பு, பக்தி இருப்பதுதான் தேசியவாதம்.

உங்களை நோக்கி மட்டுமே, உங்கள் நாட்டம் இருந்தால், அது என்னவிதமான  தேசியவாதம்? பண பலத்தால் கூட்டத்தை கூட்டி அதில் பேசி ஒரு தகவலை தெரிவிப்பது சுலபம். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதுதான் உண்மையான விஷயம். உண்மை நிலவரம் முற்றிலும் வேறுபாடாக உள்ளது. நீங்கள்  மக்களிடம் பேசும்போதுதான், வேறுபட்ட தகவல் வெளிவரும். வாரணாசி தொகுதியில் ஒரு கிராமத்துக்கு கூட பிரதமர் மோடி சென்றதில்லை. அங்குள்ள மக்கள் பிரச்னைகள் பற்றி அவர் கேட்டறிந்ததே இல்லை. பாஜ.வின்  கொள்கைகள் எல்லாமே மக்கள் விரோத கொள்கை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammu ,Modi ,Priyanka , Ammu ,Modi, Priyanka questioned
× RELATED 10 ஆண்டுகளில் மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி பேச்சு