×

தேர்தலில் பாதுகாப்பு அளிக்கும் 2.71 லட்சம் வீரர்கள், 20 லட்சம் போலீசார்

மக்களவை தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவை தேர்தலில் மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்,  அச்சமின்றியும் வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.     இதுவரை இல்லாத வகையில், இந்த தேர்தலில்தான் அதிகபட்ச வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மததிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் 2,710 துணை ராணுவ கம்பெனியினர் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஒரு கம்பெனி என்பது 100 துணை ராணுவ வீரர்களை கொண்டது.  இதன்படி, 2.71 லட்சம் துணை ராணுவத்தினர் பல்வேறு பகுதி வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அந்தந்த மாநில போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 20 லட்சம் போலீசார் வாக்குப்பதிவு மையங்களிலும், தேர்தலுக்கு பின்னர் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை பாதுகாப்பதற்காகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மாநில போலீசார் மொத்தம் 21 லட்சம்  பேரும், துணை ராணுவத்தினர் 10 லட்சம் பேரும் உள்ளனர்.  ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்த பின்னரும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு இவர்கள்  பாதுகாப்பு பணிக்காக மாற்றி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 41 ஆயிரம் போலீசார், வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldiers ,election ,police personnel , Provide protection , election, players, police
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை